என் மலர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். நகரில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை- தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
Byமாலை மலர்1 March 2018 11:45 AM IST (Updated: 1 March 2018 11:45 AM IST)
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கள்ளக்காதல் தகராறில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் விசேஷ்சாய் (வயது 10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்ற விசேஷ்சாய் பின்னர் திரும்பிவரவில்லை.
இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது மாணவனின் தாய் மஞ்சுளாவுக்கும் சேலையூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாகராஜுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சேலையூரில் பூட்டி இருந்த நாகராஜின் அறைக்கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவன் விசேஷ்சாய் கொலை செய்யப்பட்டு கிடந்தான். அறை முழுவதும் ரத்தமாக காணப்பட்டது.
விசேஷ்சாயை, கழுத்தை அறுத்து கொன்று விட்டு நாகராஜ் தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
மனைவி மஞ்சுளாவுக்கும் நாகராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததும் இருவரையும் கார்த்திகேயன் கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் மாணவன் விசேஷ்சாயை அடிக்கடி நாகராஜ் டியூசனுக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். எனவே கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மாணவனை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
நாகராஜ் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை தொடர்பாக மாணவனின் தாய் மஞ்சுளாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கள்ளக்காதல் தகராறில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Next Story
×
X