என் மலர்
செய்திகள்
X
பெருங்களத்தூரில் இருந்து புழல் வரை பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை
Byமாலை மலர்1 March 2018 1:53 PM IST (Updated: 1 March 2018 1:53 PM IST)
பெருங்களத்தூரில் இருந்து புழல் வரை பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை:
சென்னை நகருக்கு வரும் வெளியூர் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக பெருங்களத்தூரில் தொடங்கி புழல் வரை பிர மாண்டமான பைபாஸ் சாலை வழியாக சென்று வருகின்றன.
இந்த பைபாஸ் சாலை தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பைபாஸ் சாலை அமைக்கப்பட்ட பின்பு இந்த சாலையிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 30 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து துறை தகவல் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களால்தான் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட அம்பத்தூரைச் சேர்ந்த 35 வயது பெண் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வேகமாக வந்த லாரி மோதி இறந்தார்.
இதைத் தொடர்ந்து விபத்துக்களை தடுக்கவும், இரு சக்கர வாகனங்கள் பெருக்கத்தால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் பைபாஸ் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல தனி பாதை அமைப்பது பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு அறிக்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி பெருங்களத்தூரில் இருந்து புழல் வரை 32 கி.மீ. தூரத்துக்கு சாலையில் இரு புறமும் 5 மீட்டர் அகலத்தில் புதிதாக சாலை அமைத்து அதில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
கடந்த 2010-ம் ஆண்டு ரூ.400 கோடி செலவில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. தற்போதைய பைபாஸ் சாலையில் மக்கள் நடமாட்டமும், போக்கு வரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இந்த 4 வழிச் சாலையில் தினமும் 24 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அரசு வாகனங்கள், பஸ்கள், வர்த்தக வாகனங்களும் அடங்கும். இதில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகள் வழியாக இரு சக்கர வாகனங்கள் 4 வழிப்பாதைக்கு நுழைந்து செல்கின்றன. அம்பத்தூர், பட்டரைவாக்கம், வானகரம் ஆகிய இடங்களில் சர்வீஸ் சாலைகள் 4 வழிச் சாலையுடன் இணைகிறது.

Next Story
×
X