என் மலர்
செய்திகள்
X
நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு தி.க.மாணவரணி போராட்டம்
Byமாலை மலர்19 Dec 2019 1:13 PM IST (Updated: 19 Dec 2019 1:13 PM IST)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் திராவிடர் கழக மாணவர் அணியினர் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகம், கல்லூரி என்ற அளவில் நீடித்த இந்த போராட்டம் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு நடத்தும் அளவுக்கு தீவிரம் அடைந்து வருகிறது.
திராவிடர் கழக மாணவர் அணி மாநில தலைவர் பிரின்ஸ் எர்னஸ்டு பெரியார் தலைமையில் 50 பேர் நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சாஸ்திரி பவனை நோக்கி சென்றனர். மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும், நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் மத சார்பின்மை கேள்விக்குறியாகி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ்.-ன் ஊது குழலாக பா.ஜனதா செயல்படுவதை முறியடிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து தி.க. மாணவரணி தலைவர் பிரின்ஸ் எர்ணஸ்டு கூறியதாவது:-
இஸ்லாமிய, சிறுபான்மையினர் பாதிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இது போன்ற போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் அடக்கு முறையினை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
மேலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது, மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளை மூடுவது போன்றவை ஜனநாயகத்திற்கு எதிரானது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரையும், ஈழ தமிழர்களுக்கு தமிழகத்தில் குடியுரிமை வழங்கும் வரை திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் தொடரும் .
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X