search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி சிறுகடம்பூரில் உரிமம் இன்றி இயங்கி வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    X
    செஞ்சி சிறுகடம்பூரில் உரிமம் இன்றி இயங்கி வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    செஞ்சி அருகே 2 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைப்பு- தாசில்தார் நடவடிக்கை

    செஞ்சி சிறுகடம்பூர், நெகனூர் பகுதியில் 2 குடிநீர் ஆலைகள் உரிமம் இன்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 குடிநீர் ஆலைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    செஞ்சி:

    தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து, அதனை பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உரிமம் இன்றி இயங்கி வந்த 300-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

    அதுபோல் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் உரிமமின்றி இயங்கி வந்த குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 27 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மாலையில் செஞ்சி பகுதிக்குட்பட்ட குடிநீர் ஆலைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது செஞ்சி சிறுகடம்பூர், நெகனூர் பகுதியில் 2 குடிநீர் ஆலைகள் உரிமம் இன்றி இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 குடிநீர் ஆலைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    Next Story
    ×