என் மலர்
செய்திகள்
X
இரட்டை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கிணறுகளில் தேடிய போலீசார்
Byமாலை மலர்23 July 2020 2:11 PM IST (Updated: 23 July 2020 2:11 PM IST)
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே இரட்டை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கிணறுகளில் தனிப்படை போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடினர்.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது நடுக்கூரணி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபனின் தாய் ராஜகுமாரி(வயது60), மனைவி சினேகா (30) ஆகியோரை கொள்ளையர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் மற்றும் சிவகங்கை தீயணைப்பு படை நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து அந்த பகுதியில் உள்ள 90 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் 45 அடி ஆழத்தில் இருந்த தண்ணீரை 2 நீர் மூழ்கி மோட்டார் மூலம் இரவு முழுவதும் வெளியேற்றினர். அதன்பின்னர் நேற்று அதிகாலை 2 தீயணைப்பு படை வீரர்கள் இந்த கிணற்றில் இறங்கி கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளே கிடக்கிறதா? என்று விடிய விடிய தேடினர்.
இதேபோல் மற்றொரு நபருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியும் தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே இறங்கி தேடினர். தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் தேடியபோது, கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு இரவு முழுவதும் காத்திருந்தனர்.

Next Story
×
X