search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

    சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனை: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கல்?

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ள நிலையில் வருமானவரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீசும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    சென்னை:

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது வீட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரது வீட்டில் டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதில் யார், யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருந்தது.

    அதன் அடிப்படையில் முன்னாள் முதல்- அமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விஜயபாஸ்கர்

    முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், செந்தில் பாலாஜி. ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதன் மூலம் சேகர் ரெட்டி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறையினர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 14 பேரும் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ள நிலையில் வருமானவரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீசும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×