search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கண்ணகி கோவில் அருகே அமைந்துள்ள தீர்த்தசுனையை தமிழக, கேரள அதிகாரிகள் பார்வையிட்டனர்.
    X
    கண்ணகி கோவில் அருகே அமைந்துள்ள தீர்த்தசுனையை தமிழக, கேரள அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    மங்கலதேவி கண்ணகி கோவிலில் தமிழக, கேரள அதிகாரிகள் ஆய்வு

    கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் நாளை நடக்க உள்ள வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூடலூர்:

    தமிழக, கேரள எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்கூட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதாக கூறி அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    வருடத்தில் ஒருநாள் அதாவது சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இங்கு முழு சித்திரை நிலவு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாளை கண்ணகி கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த உள்ள நிலையில் கோவில் வளாகத்தில் சீரமைப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து இரு மாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    தமிழக அரசின் சார்பில் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் அர்ஜூனன், ரேஞ்சர் அருண்குமார், கேரள தரப்பில் இடுக்கி ஆர்.டிஓ. ஷாஜி, பீர்மேடு தாசில்தார் விஜயலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் நாளை நடக்க உள்ள வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வசதிகளையும் ஏற்படுத்தி தரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    மங்கலதேவி கண்ணகி கோவில் விழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். இதில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் பங்கேற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாளை தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் 7ந் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் ஆகியவை குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×