என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![35 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு 35 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2024/09/30/5001561-tn.webp)
35 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
- மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசருக்கு பட்டியலில் 29வது இடம்.
தமிழகத்தில் 35 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 3ம் இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
4வது இடத்தில் கே.என்.நேரு, 5வது இடத்தில் எல்.பெரியசாமி, 6வது இடத்தில் டாக்டர் கே.பொன்முடி, 7வது இடத்தில் எ.வ.வேலு, 8வது இடத்தில் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 9வது இடத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
10வது இடத்தில் தங்கம் தென்னரசு, 11வது இடத்தில் ரகுபதி, 12வது இடத்தில் முத்துசாமி, 13வது இடத்தில் பெரியகருப்பன், 14வது இடத்தில் தா.மோ.அன்பரசன், 15வது இடத்தில் சாமிநாதன், 16வது இடத்தில் கீதாஜீவன் உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், கோவி.செழியனுக்கு 27வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசருக்கு பட்டியலில் 29வது இடம்.