என் மலர்
தமிழ்நாடு

மேட்டூர் அணை பூங்காவை ஒரே நாளில் 4 ஆயிரத்து 722 பேர் பார்வையிட்டனர்

- ஏற்காட்டில் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- படகு இல்லத்தில் திரண்ட அவர்கள் வரிசையில் காத்திருந்து ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்காவிற்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சுற்றுலாவாக வந்து செல்கிறார்கள். விடுமுறை தினமான நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
மேட்டூர் காவிரியில் நீராடிய அவர்கள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். பின்னர் ஆடு, கோழி பலியிட்டு நேர்ததிக்கடன் செலுத்தினர். பின்னர் அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனர்.
பூங்காவில் குழந்தைகளு டன் விளையாடி மகிழ்ந்த அவர்கள் மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 4 ஆயிரத்து 722 பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 23 ஆயிரத்து 610 வசூலானது. மேலும் அணையின் பவள விழா கோபுரத்தை காண 736 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 3 ஆயிரத்து 680 வசூலானது குறிப்பிடத்தக்கது.
ஏற்காட்டில் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு இல்லத்தில் திரண்ட அவர்கள் வரிசையில் காத்திருந்து ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
மேலும் அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் சேர்வராயன் கோவில் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.