என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
தமிழ்நாட்டில் 55% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
Byமாலை மலர்29 July 2024 12:04 PM IST (Updated: 29 July 2024 1:49 PM IST)
- நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கேரளா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஜூலை 29) வரை தமிழ்நாட்டில் 179.3 மி மீ மழை பெய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 115.6 மி மீ ஆகும். ஆகவே தற்போதுவரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 55% அதிகமாக பெய்துள்ளது.
Next Story
×
X