என் மலர்
தமிழ்நாடு
போளூர்-ஆலங்காயம் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை: போக்குவரத்து பாதிப்பு
- யானையை கண்டவுடன் டிரைவர், பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.
- சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை சுற்றி திரிகிறது. போளூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் ஒற்றை கொம்பன் காட்டு யானை இன்று காலை வந்தது.
ஜமுனாமரத்தூர் அருகே அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து நின்றது. யானையை கண்டவுடன் டிரைவர், பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.
இதேபோல் அந்த பகுதியில் சென்ற வாகனங்களும் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினா். சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.
இதனால் பஸ் உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். பஸ்சுக்குள் இருந்தபடியே யானையை வீடியோ எடுப்பதும், அது எப்படா இடத்தைக் காலிச் செய்யும் என்றும் பயணிகள் காத்துக் கிடந்தனர்.
நீண்ட நேர விளையாட்டுக்குப் பின்னா் யானை மெதுவாக நடந்துசென்று காட்டுப் பகுதிக்குள் போனது. அதன் பிறகே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.