என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஆரணியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கலந்த பால் அனுப்பிய ஆவின் பெண் தலைவர் பதவி ரத்து ஆரணியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கலந்த பால் அனுப்பிய ஆவின் பெண் தலைவர் பதவி ரத்து](https://media.maalaimalar.com/h-upload/2022/08/20/1748883-aavin.jpg)
பெண் தலைவர் குமுதவள்ளி
ஆரணியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கலந்த பால் அனுப்பிய ஆவின் பெண் தலைவர் பதவி ரத்து
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின்பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- சென்னை ஆவின் கூடுதல் ஆணையர் ஆரணி பால் கூட்டுறவு சங்க பெண் தலைவர் குமுதவள்ளியின் பதவியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் குமுதவள்ளி தலைவராகவும் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினராக இருந்தனர்.
கடந்த 2019-20-ம் ஆண்டு இந்த பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பாலை சென்னை அலுவலகம் திருப்பி அனுப்பியது.
இது சம்பந்தமாக ஆவின் நிறுவனம் அபராதம் விதித்தது. இதனையடுத்து பால் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை, பால் கொள்முதல் உள்ளிட்டவைகளில் சங்க தலைவர் குமுதவள்ளி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்க உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் தனி பிரிவு மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவைகளில் புகார் மனு அளித்தார்.
இது தொடர்பாக சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின்பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பால் கொள்முதல் செய்தது. நிர்வாகத்தில் பணம் கையாடல் பாலில் தண்ணீர் கலந்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தன.
இதனையடுத்து சென்னை ஆவின் கூடுதல் ஆணையர் ஆரணி பால் கூட்டுறவு சங்க பெண் தலைவர் குமுதவள்ளியின் பதவியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.