என் மலர்
தமிழ்நாடு
திருச்சி விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
- திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் மலர் கொடுத்து வரவேற்றனர்.
கே.கே.நகர்:
திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் இன்று நடைபெறவுள்ள, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
அவருக்கு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், ஏடிஜிபி அருண்குமார், ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் மலர் கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே.எஸ். விஜயன், கல்யாண சுந்தரம் எம்.பி., தாட்கோ தலைவர் மதிவாணன், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடு வெட்டி, தியாகராஜன் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, பகுதி செயலாளர்கள் மணிவேல், மோகன்தாஸ், மாமன்ற உறுப்பினர்கள் மலர்விழி ராஜேந்திரன், பொற்கொடி மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.