search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ம.க.வை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திராவிட கட்சிகள் முயற்சி- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    பா.ம.க.வை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திராவிட கட்சிகள் முயற்சி- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

    • பா.ம.க. 2.0 செயல் திட்டம் அடிப்படையில் எங்கள் கட்சியில் மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது.
    • கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து கூட்டம் நடக்க உள்ளது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    கோவை:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக முக்கிய பிரச்சினை நூல் விலை உயர்வு. இதனால் 10 லட்சம் பேர் வேலையிழந்து உள்ளனர். நூல் விலை 120 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து நூல் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வேகப்படுத்தி முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க தமிழக அரசின் அவசர சட்டம் குறித்த இந்த அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது.

    மேகதாது அணை குறித்து வருகிற 17-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டம் சட்டத்துக்கு எதிரானது. தமிழகத்தின் அனுமதியில்லாமல் கர்நாடக அரசு காவிரிபடுகையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    ஆனால் அதையும் மீறி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து கூட்டம் நடக்க உள்ளது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    தமிழக பாரதிய ஜனதாவின் செயல்பாடு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பா.ம.க. 2.0 செயல் திட்டம் அடிப்படையில் எங்கள் கட்சியில் மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த எங்கள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் திராவிட கட்சிகள் எங்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த திட்டம் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×