என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி, விற்பனை விலையை ரூ.12 உயர்த்துவதுதான் திராவிட மாடல்- அண்ணாமலை
- விலைவாசி உயர்வு மட்டுமே தி.மு.க. ஆட்சியில் சாதனையாக உள்ளது.
- கோவை விவகாரத்தில தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது.
அந்தியூர்:
தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி விட்டு,பால் விற்பனை விலையை 12 ரூபாய் என உயர்த்துவதுதான் திராவிட மாடல். குஜராத்தில் செயல்படும் அமுல் கூட்டுறவு நிறுவனம், தனது வருவாயில் 82 சதவீதத்தை அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது.
கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆனால், அமைச்சர் நாசர் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் சொல்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பொருட்கள் தொடங்கி, சொத்துவரி, குடிநீர், மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும், தமிழகத்தில் விலையை குறைக்கவில்லை. கடந்த 16 மாத கால தி.மு.க. ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது.
கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என பா.ஜ.க. சொன்னது. அதனை என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது. எத்தனை நாளுக்குத்தான் இந்த ஏமாற்று வேலையை பார்த்துக் கொண்டு இருப்பது? வரும் மக்களவை தேர்தலின்போது, தமிழகம் இந்த மாயையில் இருந்து வெளியேறி, தேசியத்தின் பக்கம் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.