என் மலர்
தமிழ்நாடு
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல்- கூடுதல் நிர்வாகிகளை நியமித்தது காங்கிரஸ்
- விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
- மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சேர்ந்ததை அடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விளவங்கோடு இடைத்தேர்தல், தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தல் அன்றே நடைபெறுகிறது.
இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில், " நடைபெறவுள்ள 2024 விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள்.
1. டாக்டர் சாமுவேல் ஜார்ஜ்
2. கே.ஜி. ரமேஷ் குமார்
3. எஸ். சதீஷ்
4. எஸ். ஷாஜி
5. எபினேசர்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.