என் மலர்
தமிழ்நாடு

X
சென்னையில் ரூ.1,620 கோடியில் தானியங்கி மெட்ரோ ரெயில்- மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல்
By
மாலை மலர்7 Dec 2022 8:47 AM IST

- பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரெயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது.
- டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும்.
சென்னை:
சென்னையில் ரூ.1,620 கோடி செலவில் டிரைவர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரெயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது. இந்தச் சிறப்பான கட்டமைப்புக்கு உயரிய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்பட இருப்பதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும். வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு பின்னர் ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.
இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X