search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது- அண்ணாமலை பரபரப்பு பேச்சு
    X

    திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது- அண்ணாமலை பரபரப்பு பேச்சு

    • சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரை.
    • திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்.

    திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்.

    2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பாஜக நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது.

    திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும்.

    திமுக அரியணை உதயநிதி ஸ்டாலினுக்கு போகும்போது கவலரம் வெடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ரஜினிகாந்த் அவரது பாணியில் முதலமைச்சரிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

    மேலும், எனக்கு பாடம் எடுக்க நீங்கள் வர வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தவழ்ந்து காலில் விழுந்து முதலமைச்சரானவர் ஈபிஎஸ்.

    பிரதமர் மோடியை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×