search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாடுதுறை மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்-  போலீசார் தீவிர சோதனை
    X

    மயிலாடுதுறை மணிக்கூண்டையும், அதில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வதையும் காணலாம்.

    மயிலாடுதுறை மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை

    • இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.
    • கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காந்திஜி சாலை - பட்டமங்கலம் சாலை சந்திப்பில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்து உள்ளது. இந்த மணிகூண்டு கோபுரம் மயிலாடுதுறையின் பழமையும் நினைவு கோபுர தூணாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசிய மர்மநபர் மயிலாடுதுறை மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் நாகை மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மணிக்கூண்டு கோபுரத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முடிவில் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது.

    வெடிகுண்டு உள்ளதாக புரளியை பரப்பியவர் யார்? என போலீசார் விசாரித்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மணிக்கூண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×