என் மலர்
தமிழ்நாடு
நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- மாண்டஸ் புயல் கரையை கடப்பது மேலும் 2 மணி நேரம் நீடிக்கும்.
- 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்றிரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரை கடக்க தொடங்கிய நிலையில், சற்று முன்னர் புயலின் மையம் மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ தொலைவில் நெருங்கி வந்துள்ளதாகவும், புயல் கரையை கடப்பது மேலும் 2 மணி நேரம் நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சூழலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிழே விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகளை சரி செய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.