என் மலர்
தமிழ்நாடு
X
நத்தம் மாரியம்மன் கோவிலில் போலி ரசீது வழங்கிய எழுத்தர் சஸ்பெண்டு
BySuresh K Jangir25 Feb 2023 11:27 AM IST (Updated: 25 Feb 2023 11:27 AM IST)
- கடந்த 21ந் தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
- காப்பு கட்டும் மஞ்சள் துணி ரூ.20க்கு இந்து அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டது.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்களின் எழுத்தர் முனியாண்டி. தற்போது நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா நடக்கிறது.
இதையொட்டி கடந்த 21ந் தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். காப்பு கட்டும் மஞ்சள் துணி ரூ.20க்கு இந்து அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டது.
இதனை ஜெராக்ஸ் எடுத்து போலியாக பக்தர்களுக்கு ரசீது வழங்கி ஊழலில் ஈடுபட்டதாக எழுத்தர் முனியாண்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சூரியனிடம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் சுரேஷ் விசாரணை நடத்தினார். இதில் முனியாண்டி போலி ரசீது பயன்படுத்தியது தெரிய வந்ததால் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
Next Story
×
X