search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துணை ஆட்சியர்களாக தேர்வான 18 பேருக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் வழங்கினார்
    X

    துணை ஆட்சியர்களாக தேர்வான 18 பேருக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் வழங்கினார்

    • கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 54 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம்.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    சென்னை:

    செங்கல்பட்டில் 1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 54 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம்;

    மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் 2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 3 கோடியே 82 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், சாத்தான்குளத்தில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் திருச்சிராப்பள்ளியில் 2 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 19 கோடியே 84 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதலமைச்சர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    Next Story
    ×