என் மலர்
தமிழ்நாடு
X
ஜாகுவார் ஆலைக்கு செப்.28-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
Byமாலை மலர்16 Sept 2024 10:53 AM IST
- ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது.
- பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
சென்னை:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. பனப்பாக்கத்தில் அமைய உள்ள கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
Next Story
×
X