என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மது விருந்தில் ஆண் நண்பர்களுக்கு கல்லூரி மாணவிகளை விருந்தாக்கிய தோழி
- என் தோழிகளை பார்த்து ஒருமுறை தவறு செய்து விட்டேன். அதன்பிறகும் பார்ட்டிக்கு அழைத்தார்கள்.
- ஆடியோ வெளியிட்ட மாணவி போன்று வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் பங்கேற்க சில தோழிகளையும் அழைத்திருந்தார். அப்போது மாணவியின் பள்ளிக்கூட நண்பரான ஒரு வாலிபரும் அங்கு வந்தார். அவர் மாணவியுடன் தகராறு செய்ததோடு, கட்டையை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக தாக்கினார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுதொடர்பாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற ஆண் நண்பர்களுடன் சம்பந்தப்பட்ட மாணவி பழகியதால் காதல் முறிவு ஏற்பட்டதும், இது தொடர்பான பிரச்சினையில் பார்ட்டி நடந்த வீட்டில் இந்த தாக்குதல் நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த வீடு முழுவதும் இளைஞர்கள், இளம்பெண்ணின் ஆடைகள், சிகரெட் துண்டுகள், ஆணுறைகள், மதுபாட்டில்கள் ஏராளமாக கிடந்தன. இதுதொடர்பாக பார்ட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இளம்பெண் ஒருவர் கண்ணீர்மல்க பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் பேசும் இளம்பெண் கல்லூரி மாணவி ஆவார்.
பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் இரவு நேரங்களில் குளச்சல் பகுதியில் உள்ள தோழியின் உறவினர் ஒருவரின் பங்களா ஒன்றில் ஆண் நண்பர்கள், கல்லூரி தோழிகள் ஒன்றுகூடி மது விருந்தை தொடங்கி உள்ளனர். முதலில் ஒரு மாணவி தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருப்பதை பார்த்த மற்ற மாணவிகளும் மது விருந்துக்கு வரும் வேறு ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க தொடங்கியுள்ளனர். கான்செப்ட் சரக்கு பார்ட்டி- ஜாயின்ட் என்ற பெயரில் இந்த மது விருந்து நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ஆடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி கதறி அழுதவாறு அந்த கல்லூரி மாணவி பேசிய ஆடியோவில் உள்ள விவரம் வருமாறு:-
அன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு என்னை 2 தோழிகள் தொடர்ந்து செல்போன் மூலம் அழைத்துகொண்டிருந்தார்கள். வா... வெளியே செல்லலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூப்பிட்டார்கள். அவர்கள் கேர்ள் பிரண்டுகளுடன் மது அருந்துவது எனக்கு தெரியும். அதேபோல் மது குடிப்பதற்குதான் என்னை அழைக்கிறார்கள் என்று நினைத்துதான் நான் அவர்களுடன் சென்றேன். அங்கு பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் ஒரு பையன் வரப்போகிறான் என்று தெரிந்தது. அதுவும் அங்கு சென்றபிறகுதான் ஜாயின்ட் இருக்கிறது என்பது தெரிந்தது. முன்பே ஜாயின்ட் இருப்பது தெரிந்திருந்தால் நான் அங்கு சென்றிருக்க மாட்டேன்.
என் தோழிகளை பார்த்து ஒருமுறை தவறு செய்து விட்டேன். அதன்பிறகும் பார்ட்டிக்கு அழைத்தார்கள். திரும்பதிரும்ப அழைத்து கொண்டிருந்தார்கள். நான்தான் ஒருமுறை தவறு செய்துவிட்டேன். அதன்பிறகு எதற்கு என்று செல்லவில்லை. தற்போது என்னை சிக்க வைக்கப்பார்க்கிறார்கள். அந்த தோழிகளால் ஒரு முறை தவறு செய்து விட்டேன். இனி இவ்வாறு செய்ய மாட்டேன். தவறாக நினைக்காதீர்கள். என் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம், என்று அந்த மாணவி பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
இந்த ஆடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பார்ட்டி நடந்த பங்களாவின் உரிமையாளர் யார்? இந்த பங்களாவுக்கு யார், யார் வந்து செல்கிறார்கள்? ஆடியோ வெளியிட்ட மாணவி போன்று வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற கலாசார சீரழிவு சம்பவம் நகர்புற பகுதிகளில்தான் அதிகமாக நடப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது மெல்ல மெல்ல கிராம பகுதிக்குள்ளும் கால் பதித்து இருப்பது பலரது புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்த வைத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்