search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ்சில் பயணிகளை மிரட்டிய கண்டக்டர் சஸ்பெண்டு
    X

    அரசு பஸ்சில் பயணிகளை மிரட்டிய கண்டக்டர் சஸ்பெண்டு

    • பஸ்சில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவ-மாணவிகள் சிலர் ஏறினர்.
    • வீடியோ விவகாரம் கண்டக்டர் பணியாற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கும் சென்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ்சில் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பாபு என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    அந்த பஸ்சில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவ-மாணவிகள் சிலர் ஏறினர். அவர்கள் பந்தலூர், சேரம்பாடி அருகே உள்ள காப்பிக்காடு என்ற இடத்தில் இறங்கினர். அப்போது மாணவ-மாணவிகளிடம் இந்த பஸ் எக்ஸ்பிரஸ் இனிமேல் இதில் ஏறக்கூடாது, டவுன் பஸ்களில் ஏறிச் செல்லுங்கள் என கண்டக்டர் பாபு கண்டித்தார்.

    இதற்கு பஸ்சில் இருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவ-மாணவிகள் தானே அவர்களை அனுசரித்து அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிச் செல்லுங்கள் என கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் பாபு, கள்ளிக்கோட்டைக்கு போய் சேர வேண்டுமா, வேண்டாமா? என கேட்டதுடன் பயணிகளை பார்த்து மிரட்டவும் செய்துள்ளார். இதனை யாரோ ஒரு பயணி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்.

    இந்த வீடியோ விவகாரம் அவர் பணியாற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணி மனை அதிகாரிகளுக்கும் சென்றது. அதன்பேரில் பாபு மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் பயணிகளுடன் தகராறு செய்து அவர்களை மிரட்டியது உறுதியானது. இதைத்தொடர்ந்து கண்டக்டர் பாபு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×