என் மலர்
தமிழ்நாடு
X
கருங்கலில் காங்கிரசார் திடீர் மறியல் போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது
BySuresh K Jangir25 March 2023 1:56 PM IST
- கருங்கலில் ராஜீவ்காந்தி சந்திப்பில் வக்கீல் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கருங்கல் போலீசார் கைது செய்தனர்.
கருங்கல்:
அவதூறு குற்றசாட்டின் பேரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டது. அதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருங்கலில் ராஜீவ்காந்தி சந்திப்பில் வக்கீல் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கருங்கல் போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தையொட்டி குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
Next Story
×
X