என் மலர்
தமிழ்நாடு

X
சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு
By
மாலை மலர்18 Jan 2024 6:00 PM IST

- சி.வி.சண்முகம் பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து சி.வி.சண்முகம் பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதில், 12 மணி நேர வேலை நேரம் குறித்த அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, மது விற்பனை தொடர்பான போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டன.
அரசு, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, 4 வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
Next Story
×
X