என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![விடுமுறை நாள்-சுபமுகூர்த்த தினம்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் விடுமுறை நாள்-சுபமுகூர்த்த தினம்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/03/1943445-tiruchendur1.webp)
திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்.
விடுமுறை நாள்-சுபமுகூர்த்த தினம்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
- கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஞாயிற்று கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது.
இன்று சுப முகூர்த்த தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றது.
அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.