என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சேலத்தில் கழுதை பால் விற்பனை அமோகம்- ஒரு சங்கு ரூ.100-க்கு விநியோகம் சேலத்தில் கழுதை பால் விற்பனை அமோகம்- ஒரு சங்கு ரூ.100-க்கு விநியோகம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/30/1738149-milk.jpg)
கழுதை பால் விற்பனை செய்தவரை காணலாம்
சேலத்தில் கழுதை பால் விற்பனை அமோகம்- ஒரு சங்கு ரூ.100-க்கு விநியோகம்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கழுதை பால் விற்பனை செய்வதன் மூலம் எங்களுக்கு தினமும் ரூ.1000 முதல் ரூ.1200 வரை வருமானம் கிடைக்கும்.
- பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
அன்னதானப்பட்டி:
சேலம் குகை, தாதகாப்பட்டி, லைன்மேடு, அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கழுதை பால் கூவி கூவி விற்கப்பட்டு வருகிறது. மருத்துவ குணங்கள் கொண்டது என்ற நம்பிக்கையில் கழுதை பால் வாங்கி குடிக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள். 1 சங்கு கழுதை பால் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் பலரும் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தனர்.
நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலைச் செய்து வருகிறோம். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கழுதைகளை வாங்கி வருகிறோம். குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை, கழுதைகளிடம் இருந்து பால் கிடைக்கும். ஒரு கழுதையின் விலை அளவைப் பொறுத்து ரூ.8000 முதல் ரூ.16,000 வரை ஆகும். பால் நின்றவுடன் தோராயமாக ரூ.5000-க்கு வாங்கியவர்களிடமே கழுதையை திரும்ப விற்று விடுவோம். அவர்கள் அந்த கழுதையை இனச்சேர்க்கைக்கு அனுப்பி வைத்து, கர்ப்பம் தரித்து, 12 மாதங்கள் கழித்து, புதிதாக குட்டி ஈன்ற பின்பு, மீண்டும் எங்களை போன்ற கழுதை பால் வியாபாரிகளுக்கு கழுதைகளை விற்பனை செய்து விடுவார்கள்.
கழுதை பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு சளி, தோஷ, மாந்திரீக பிரச்சனைகளுக்கு கழுதை பால் உகந்தது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். 12 மணி நேரம் வரை கழுதை பால் கெடாமல் இருக்கும்.
கழுதை பால் விற்பனை செய்வதன் மூலம் எங்களுக்கு தினமும் ரூ.1000 முதல் ரூ.1200 வரை வருமானம் கிடைக்கும். இது ஒரு சீசன், நாடோடி தொழிலாகும். இந்த வேலை இல்லாத சமயத்தில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்வோம். எங்கும் குல தெய்வங்களாக இந்த கழுதைகளை நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.