என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றில் டைவ் அடித்து குளித்து மகிழும் மூதாட்டி கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றில் டைவ் அடித்து குளித்து மகிழும் மூதாட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/02/09/1833401-woman.webp)
தாமிரபரணி ஆற்றில் ‘டைவ்’ அடிக்கும் மூதாட்டி.
கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றில் 'டைவ்' அடித்து குளித்து மகிழும் மூதாட்டி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மூதாட்டி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த சுவற்றில் ஏறி எந்தவித பயமும் இன்றி ஆற்றுக்குள் டைவ் அடிப்பது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.
- நெல்லை பெண்களின் இந்த துணிச்சல் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.
கல்லிடைக்குறிச்சி:
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநீதியான தாமிரபரணி ஆறு பாரம்பரிய ஆற்றங்கரை நாகரீகத்தை கொண்டது.
இந்த ஆற்றில் நெல்லை மக்கள் நாள்தோறும் குளித்து மகிழ்வது வழக்கம், இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் வயதான பெண்கள் சேலை அணிந்தபடி 'டைவ்' அடித்து ஆனந்தமுடன் குளித்து மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மூதாட்டி ஒருவர் ஆற்றின் கரையில் இருந்த சுவற்றில் ஏறி எந்தவித பயமும் இன்றி ஆற்றுக்குள் டைவ் அடிப்பது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் புடவை அணிந்த இந்த வயதான பெண்கள் சிரமமின்றி குதிப்பதை பார்த்து வியந்தேன் என பெருமையோடு அவர் பதிவிட்டுள்ளார். நெல்லை பெண்களின் இந்த துணிச்சல் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.