search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்- அமைப்பின் இயக்குனரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
    X

    போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்- அமைப்பின் இயக்குனரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    • அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ந்தேதி நடைபெற்றது.

    இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார்.

    இந்த நிலையில்தான் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஹரிஷ் என்பவர்தான் போலி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். சர்வதேச ஊழல் தடுப்பு மனித உரிமை ஆணையத்தின் இயக்குனராக உள்ள அவர்தான் வடிவேலுவுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கி பாராட்டும் தெரிவித்து இருந்தார்.

    இதைதொடர்ந்து ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் 406, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரிஷின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    Next Story
    ×