என் மலர்
தமிழ்நாடு
X
பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- சரத்குமார்
Byமாலை மலர்19 Aug 2024 1:36 PM IST
- ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை.
- சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை. வருமானம் என்பதைத் தாண்டி இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டும்.
சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்புகள் அவசியம் என்பதை உணர்ந்து ஆளும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
X