search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பலத்த காற்றுடன் மழை: ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம் சாய்ந்தது- போக்குவரத்து பாதிப்பு
    X

    சாலையின் குறுக்கே மரம் சாய்ந்துள்ள காட்சி

    பலத்த காற்றுடன் மழை: ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம் சாய்ந்தது- போக்குவரத்து பாதிப்பு

    • ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
    • சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஏற்காடு மலை பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது.

    சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

    Next Story
    ×