என் மலர்
தமிழ்நாடு
விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது- கள்ளக்குறிச்சி கலெக்டர்
- மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம். உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறினார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.