என் மலர்
தமிழ்நாடு

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா- சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

- தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி.
- அதிமுகவை விட திமுகவில் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம் என மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் விழா மேடையில், ஜானகி எம்ஜிஆர் சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடு, பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் நூல் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
என் மீது எம்ஜிஆர் அதிக பாசம் கொண்டவர். அதிமுகவை விட திமுகவில் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம். தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. ஜானகி அம்மையார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர் கருணாநிதி.
இன்று நூற்றாண்டு விழா காணும் இந்த கல்லூரியை தொடங்கிய ஜானகி அம்மையார், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர். பல கலைகளை முறையாக கற்றவர். கொடை உள்ளம் கொண்டவர். அவரது முதல் படத்திற்கு கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அவரது கடைசி படத்திற்கும் கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதிதான். ஜானகி மட்டும்தான் எனது வாரிசு என உயில் எழுதி வைத்தவர் எம்ஜிஆர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.