search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    vijay and kanimozhi
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விஜய்-க்கு அறிவுரை கூறிய கனிமொழி - என்ன சொன்னார் தெரியுமா?

    • விஜய்யின் அரசியல் வருகை குறித்து கனிமொழி கருத்து தெரிவித்தார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். திரைத்துறை தாண்டி, அரசியலில் களம் காண முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய், தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

    மேலும், விரைவில் கட்சி கொடி அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடத்தை இறுதி செய்யும் பணிகளில் நிறைய இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

    இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எம்பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த எம்பி கனிமொழி, "விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு- அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×