என் மலர்
தமிழ்நாடு
திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்
- குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.
- எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
* இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
* நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை.
* பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது.
* திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.
* குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது மாநில அரசுதான்.
* குலசை ராக்கெட் ஏவுதளம் தொடர்ந்து எங்களால் வலியுறுத்தப்பட்டு, அமைக்கப்பட்டுள்ளது.
* எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.
* முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
* அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.
* தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை மக்கள் அறிவர் என்று அவர் கூறினார்.