search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார்த்திகை தீபத்திருவிழா- மதுரை, நெல்லை, கோவையில் இருந்து திருவண்ணாமலை சிறப்பு பஸ்கள்
    X

    கார்த்திகை தீபத்திருவிழா- மதுரை, நெல்லை, கோவையில் இருந்து திருவண்ணாமலை சிறப்பு பஸ்கள்

    • அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் அதிநவீன சொகுசு பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    திருவண்ணாமலை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவது வழக்கம். தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் அதிநவீன சொகுசு பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 5-ந் தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, நெல்லை 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோவை 9445014435, தலைமையகம் (சென்னை) 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் பஸ் வசதியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×