search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
    X

    ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்.

    ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

    • தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலா்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.
    • தற்போது இங்கு பூத்துள்ள குறிஞ்சி மலா்கள் சிறு குறிஞ்சி வகையை சோ்ந்தவை என தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைச்சரிவுகளில் பல்வேறு வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன.

    இவற்றில், ஆண்டுக்கு ஒருமுறையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலா்கள் வரை உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் கல்லட்டி மலைச்சரிவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ரகத்தில் பூத்துக்குலுங்கிய குறிஞ்சி மலா்களைத் தொடா்ந்து தற்போது தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலா்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    தொட்டபெட்டா மலைச்சரிவில் சின்கோனா பகுதியிலும், தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு அருகேயுள்ள தேயிலை தொழிற்சாலை பகுதியிலும் இந்த குறிஞ்சி மலா்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

    தற்போது இங்கு பூத்துள்ள குறிஞ்சி மலா்கள் சிறு குறிஞ்சி வகையை சோ்ந்தவை எனவும், இவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ரகம் எனவும், தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

    இந்த குறிஞ்சி மலா்கள் மலைப்பகுதி முழுக்க இல்லாமல் சிறுசிறு இடைவெளிகளில் பூத்துள்ளன.

    ஊட்டியில் தற்போது 2-வது சீசன் களைகட்டியுள்ள சூழலில், தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்களை காணவும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    Next Story
    ×