என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநருக்கு கடிதம் தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநருக்கு கடிதம்](https://media.maalaimalar.com/h-upload/2024/09/28/4954020-tngov.webp)
தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநருக்கு கடிதம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா ? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
ஆளுநர் சென்னை திரும்பியதும் கடிதம் குறித்து ஆளுநர் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அதனால், இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் குறித்து பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.