என் மலர்
தமிழ்நாடு
லைவ் அப்டேட்ஸ்:அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
- ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
Live Updates
- 11 July 2022 9:04 AM IST
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
- 11 July 2022 8:59 AM IST
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது
- 11 July 2022 8:55 AM IST
மோதல் நீடிக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்
- 11 July 2022 8:53 AM IST
கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி படம் அச்சிடப்பட்ட பேனர்களை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது
- 11 July 2022 8:52 AM IST
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் வந்தடைந்தார் ஈபிஎஸ். வழிநெடுகிலும் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
- 11 July 2022 8:46 AM IST
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்த நிலையில், ஓபிஎஸ் வாகனம் தலைமை அலுவலகத்திற்கு வந்தது. மோதலுக்கு இடையே ஓபிஎஸ் தலைமை அலுவலக வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை வணங்கி மரியாதை செலுத்தினார். அதிமுக கொடியை உயர்த்தி பிடித்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்குள் சென்றார்.
- 11 July 2022 8:41 AM IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.