search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போடி அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
    X

    போடி அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

    • அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார்.
    • கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின்படி போதை ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்புபடையினர் விரைந்து சென்று 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக கருப்பையாவை கைது செய்தனர். போடி மற்றும் மலையடிவார பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×