என் மலர்
தமிழ்நாடு
X
மருத்துவ காலி பணியிடங்கள்- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
Byமாலை மலர்5 Sept 2024 2:01 PM IST
- ஒரு துறையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு இபிஎஸ் பேச வேண்டும்.
- 3 ஆண்டுகளில் 6700-க்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.
சென்னை:
மருத்துவ காலி பணியிடங்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு துறையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு இபிஎஸ் பேச வேண்டும்.
* போராடிய மருத்துவர்களுக்கு தண்டனையாக பணியிடமாற்றம் செய்தது அதிமுக அரசு.
* ஒப்பந்த பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு கூட தீர்வு காணப்பட்டுள்ளது.
* திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 1947 உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* 3 ஆண்டுகளில் 6700-க்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.
* 3 ஆண்டுகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளது என்று கூறினார்.
Next Story
×
X