என் மலர்
தமிழ்நாடு
அமைச்சர் பொன்முடி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரிக்க கூடுதல் அவகாசம்- நீதிமன்றம் உத்தரவு
- வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு.
விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 14ம் தேதி விர அவகாசம் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்களாக சேர்க்கப்பட்டு இதுவரை 51 சாட்சியம் பெறப்பட்ட நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இதனால் கூடுதல் சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.