என் மலர்
தமிழ்நாடு
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- கள்ளச்சாராயாம் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் மேலும் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சற்று முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட கருணாபுரம் கிராமத்திற்கும் உதயநிதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.