search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலசபாக்கம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. திருவேங்கடம் மரணம்- முதலமைச்சர் இரங்கல்
    X

    முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. திருவேங்கடம்

    கலசபாக்கம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. திருவேங்கடம் மரணம்- முதலமைச்சர் இரங்கல்

    • பெரிய கிளாம்பாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் திருவேங்கடம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • திருவேங்கடம் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. திருவேங்கடம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.

    மூத்த முன்னோடியான திருவேங்கடம் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக இருந்தார். கலசப்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் முதல் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    தற்போது இவரது மகன் பெ.சு.தி. சரவணன் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    பெரிய கிளாம்பாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் திருவேங்கடம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தந்தை திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    திருவேங்கடம் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணை செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நாளை காலை 10 மணி அளவில் சொந்த ஊரான பெரிய கிளாம்பாடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×