search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாட்டில் சோழர் காலம் தொட்டே கிராம சபைக்கூட்டம் வழக்கத்தில் உள்ளது.
    • வேளாண்மைக்கு என்ற தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தி.மு.க. அரசுதான்.

    சென்னை:

    இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கிராம சபை கூட்டம் நடைபெறுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம். தமிழ்நாட்டில் சோழர் காலம் தொட்டே கிராம சபைக்கூட்டம் வழக்கத்தில் உள்ளது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்.

    கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் தடையின்றி ஒலிக்க வேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் கிராமங்களே முன்னிலை வகிக்கிறது.

    கிராம அளவில் கிராம சபை கூட்டம் மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக உள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற வேண்டும். கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ரூ.1000-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மைக்கு என்ற தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தி.மு.க. அரசுதான்.

    தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகே கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×