என் மலர்
தமிழ்நாடு
X
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி கூடாது- சென்னை ஐகோர்ட் உத்தரவு
Byமாலை மலர்2 Sept 2024 2:54 PM IST
- வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி.
- மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உறுதி.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.
வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
X