search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
    X

    பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்

    • பிரதமர் மோடி தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
    • பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன.

    பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ தமிழ்நாட்டு மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

    அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

    நெடுஞ்சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.

    சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், பாராளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்து உள்ளார்.

    Live Updates

    • 17 Sept 2024 9:44 AM IST

      ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் " பிறந்தநாளில் ஒடிசாவுக்கு வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாளில், ஒடிசா பெண்களுக்கான சுபத்ரா யோஜனா அவரது தாமரை கைகளால் தொடங்கப்பட உள்ளது. அவரது பிறந்தநாளில் ஒடிசாவின் பெண்களின் அதிகாரமளிப்புக்கு ஒரு முக்கியமான பரிசாக இருக்கும்"எனத் தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 9:39 AM IST

      மாநிலத்தில் வசிக்கும் 1.25 கோடி மக்கள் சார்பாக, உங்கள் ஆரோக்கியமான, வளமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்காக நான் மகாதேவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் தலைமையில், தேசத்தின் வளர்ச்சி. பாதையில் புதிய பரிமாணங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 9:36 AM IST

      குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.


    • 17 Sept 2024 9:34 AM IST

      பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    • 17 Sept 2024 9:31 AM IST

      பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 9:29 AM IST

      பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

      பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

    • 17 Sept 2024 9:27 AM IST

      பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×