என் மலர்
தமிழ்நாடு
சாத்தான்குளத்தில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
- பால்பாண்டி சப்-இன்ஸ்பெக்டராக வேண்டும் என நினைத்து இருந்தார்.
- சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம்:
சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது30). இவர் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
பால்பாண்டி சப்-இன்ஸ்பெக்டராக வேண்டும் என நினைத்து இருந்தார். இதனால் கடந்த ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற்று தேர்வு எழுதினார். அதில் 1 மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். மீண்டும் தற்போது நடந்து முடிந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியுள்ளார். அதற்கான முடிவு வந்ததில் அரை மதிப்பெண் குறைந்து தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் களை கொல்லி விஷம் மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.